Loading...
 

செயல்திட்ட வகைகள்

 

 

கல்வித் திட்டத்தில் பல்வேறு வகையான செயல்திட்டங்கள் உள்ளன. சில "சாதாரண" கிளப் செயல்திட்டங்களாகவும், மற்றவை கிளப்புக்கு வெளியே வேலை செய்வது, ஆராய்ச்சி செய்வது, உறுப்பினர் அல்லாதவர்களை வழிநடத்துவது போன்ற பல குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்டிருக்கும். இந்தத் தன்மைகள் பின்வரும் சின்னங்கள் மூலம் குறிக்கப்படுகின்றன: (ஒரே செயல்திட்டத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை ஒரே நேரத்தில் இடம்பெறலாம் என்பதை நினைவில் கொள்க)

 

அடிப்படை செயல்திட்டங்கள்

 

Project Club  Club செயல்திட்டம்

பெரும்பாலான செயல்திட்டங்கள் குறிப்பிட்ட இலக்குகளின் அடிப்படையில், சொற்பொழிவு ஒன்றைத் தயார் செய்து, உங்கள் கிளப்பில் அதனை வழங்குவதை உள்ளடக்கியது. இந்தச் சொற்பொழிவினைத் தயாரிக்க, எங்கள் கல்வி ரீதியான கையேடுகள் மற்றும் ஆதாரங்களைப் பயன்படுத்தலாம், மேலும் உங்கள் வழிகாட்டியாக இருக்கும் ஆசானிடமும் ஆலோசனை கேட்கலாம். சொற்பொழிவை நிகழ்த்திய பிறகு, விரிவான மதிப்பீடு மற்றும் கருத்துக்களை நீங்கள் பெறுவீர்கள், அது ஒரு பேச்சாளராக உங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும்.

 

Project Analysis  சொற்பொழிவு பகுப்பாய்வு செயல்திட்டங்கள்

சொற்பொழிவு பகுப்பாய்வு செயல்திட்டங்கள் என்பது அடிப்படை கல்வி வரிசை அமைப்பில் உள்ள ஒவ்வொரு செயல்திட்டத்திலும் ஒரு அங்கமாக இருக்கும். அவர்கள் ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்திலிருந்து ஒரு புகழ்பெற்ற சொற்பொழிவை பகுப்பாய்வு செய்து, நீங்கள் பகுப்பாய்வு செய்தவற்றை கிளப்பில் வழங்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், நீங்களும் உங்கள் சக கிளப் உறுப்பினர்களும் முன்மாதிரிகள் அல்லது உத்வேகத்தை வழங்கக்கூடிய பல்வேறு உலகத்தரம் வாய்ந்த சொற்பொழிவுகள் குறித்து அறிந்துக் கொள்வீர்கள்.

 

மேம்பட்ட செயல்திட்டங்கள்

நீங்கள் மேம்பட்ட செயல்திட்டங்களுக்கு முன்னேறிச் செல்கையில், குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சிறப்பு வாய்ந்த வரிசை அமைப்பில் முன்னேறிச் செல்கையில், நீங்கள் மென்மேலும் சவாலான சூழ்நிலைகளைக் காண்பீர்கள், அவை அனைத்தும் உங்களை ஒரு சிறந்த தொடர்பாளராகவும் தன்னம்பிக்கைமிக்க தலைவராகவும் ஆக்குகின்றன:

 

Project Research  ஆராய்ச்சி செயல்திட்டம்

ஆராய்ச்சி செயல்திட்டத்திற்கு சொற்பொழிவை தயார் செய்து, அதை கிளப்பில் வழங்குவது மட்டுமல்லாமல் அதற்கு முன்னும் பின்னும் சில ஆராய்ச்சியையும் செய்ய வேண்டும். உதாரணமாக, ஒரு வேலை நேர்காணலுக்கு, நீங்கள் வேலை நேர்காணலுக்கு தயார் செய்வது மட்டுமல்லாமல், நீங்கள் விண்ணப்பிக்கப் போகும் நிறுவனம் மற்றும் பதவி குறித்து ஆராய்ச்சி செய்வீர்கள் அல்லவா, அதைப்போல இதற்கும் செய்ய வேண்டும். உத்வேகமளிக்கும் சொற்பொழிவுக்கு, பார்வையாளர்கள் வற்புறுத்தப்பட வேண்டுமா என்பதைக் கண்டுபிடிக்க, உங்கள் பார்வையாளர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் முன்கூட்டியே தெரிந்துக் கொள்ள வேண்டும்.

 

Project Mesaured  அளவிடப்படும் செயல்திட்டம்

அளவிடப்படும் திட்டங்களில், உங்கள் மதிப்பீட்டாளரிடமிருந்து பொதுவான கருத்து மற்றும் உங்கள் திட்டம் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதற்கான எண் வடிவிலான அளவீட்டையும் (மதிப்பெண்களையும்) பெறுவீர்கள். "தேர்ச்சி மதிப்பெண்" அல்லது "தோல்வி மதிப்பெண்" என்று ஒன்றுமில்லை, அல்லது ஒரு நிலையை கடப்பதற்கான மதிப்பெண் என்று எந்த வரம்பும் இல்லை (நீங்களே அமைத்துக் கொள்ளக்கூடிய ஒன்றைத் தவிர), ஆனால் செயல்திட்டம் நிஜத்தில் எவ்வாறு இருந்தது என்பது குறித்த உங்கள் சொந்த கருத்தை சீரமைக்க உதவும் வகையில் இந்த அளவீடு உள்ளது. வெவ்வேறு செயல்திட்டங்கள் வெவ்வேறு அளவீடுகளைப் பயன்படுத்துகின்றன.

 

Project Realworld நிஜ உலக செயல்திட்டம்

காலம் செல்லச் செல்ல, நீங்கள் உங்கள் கிளப்பில் மென்மேலும் பங்கேற்று சொற்பொழிவாற்றும்போது, உங்கள் சக உறுப்பினர்களுக்கு முன்னால் பேசுவது உங்களுக்கு சௌகரியமான விஷயமாகிவிடும். சமூகமயமாக்கலின் அடிப்படையில் இது மிகவும் வரவேற்கத்தக்க வளர்ச்சி என்றாலும், கற்பது அல்லது உங்களுக்கு நீங்களே சவால் விடுவது என்று வரும்போது இந்தளவு போதாது. கல்வித் திட்டத்தின் மேம்பட்ட வரிசை அமைப்புகளில், நீங்கள் நிறைய "நிஜ உலக" செயல்திட்டங்களைக் காண்பீர்கள். நிஜ உலகத் செயல்திட்டங்களுக்கு நீங்கள் உங்கள் கிளப்பின் சௌகரியமான பகுதியை விட்டு வெளியேறி சொற்பொழிவுகளை வழங்க வேண்டும் அல்லது கிளப் சூழலுக்கு வெளியே சென்று மக்களை வழிநடத்த வேண்டும். அது ஒரு நகைச்சுவை கிளப்பில் மேடை நிகழ்ச்சி வழங்குவதாக இருக்கலாம், நாடக நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருக்கலாம் அல்லது இலாப நோக்கற்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதாக இருக்கலாம், இத்தகைய செயல்திட்டங்கள் உங்களை கூட்டில் இருந்து நிஜ உலகத்திற்கு பறக்க வைக்கும் மற்றும் உங்களை பல்வேறு விதமான சூழல்களில் உட்படுத்தி, அதனை எதிர்கொள்ள வைக்கும். 

இந்தச் செயல்திட்டங்கள் அனைத்தும் உங்களை ஊக்குவித்து, உங்களிடமே சவால் விடுவிட்டு, படிப்படியாக உங்களை "நிஜ உலகத்திற்கு" கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, அங்கு உங்கள் கிளப்பில் கிடைக்கும் சௌகரியங்கள் இருக்காது, விஷயங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது மற்றும் நடக்கும் விஷயங்களை கணிக்க முடியாது.

 

Project Betterworld  உலகை மேம்படுத்துதல்

கல்வித் திட்டத்தின் இறுதி மற்றும் மிகவும் சவாலான (மற்றும் மன நிறைவு தருகிற) செயல்திட்டங்கள், குறிப்பாக தலைமைத்துவ திறன்களின் அடிப்படையில், உங்களுக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருப்பது மட்டுமல்லாமல் உண்மையில் Agora-வுக்கு வெளியே உள்ள நிஜ மக்களின் வாழ்க்கையில் பலனளிக்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும். "உலகை மேம்படுத்துதல்", என்பவற்றில், நீங்கள் இலாப நோக்கமற்ற அல்லது தொண்டு பிரச்சாரங்களை முன்னெடுப்பீர்கள், நிதி திரட்டுவீர்கள், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள், மற்றும் நீங்கள் ஒரு நபராக இருந்தாலும், இந்த உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கு உங்களால் பங்களிக்க முடியும் என்பதை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:04:50 CET by agora.